வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி | 'மெமரிஸ்' இரண்டாம் பாகம் ; பிரித்விராஜ் விருப்பம் | பட விளம்பர மோசடி ; பெண் உள்ளிட்ட ஐவர் மீது நடிகர் யஷ்ஷின் தாயார் போலீசில் புகார் | இரண்டு நாளில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொட்ட மஞ்சு வாரியரின் குறும்படம் | மோகன்லால் மம்முட்டி படங்களை பயன்படுத்தியதால் 2 வருட தடை விதித்தனர் ; இயக்குனர் வினயன் |

கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருந்த நடிகை கங்கனா ரணவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். மணிகர்னிகாக படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக அறிவித்தார். காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றார். இதனால் பல புகார்கள், விசாரணைகளை சந்தித்தார்.
இந்த ஆண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காளகஸ்தி வந்து சாமி தரிசனம் செய்து கோ பூஜையும் செய்தார். பின்னர் ராகு கேது பூஜை செய்தார். காளகஸ்தி தோஷம் நீக்கம் புண்ணிய ஸ்தலம் என்பதால் இந்த பூஜைகளை செய்தார்.
பின்னர், அவருக்கு வேதசீர்வசனம் வழங்கப்பட்டது. காளகஸ்தி எம்எல்ஏ அவருக்கு நினைவு பரிசு மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.