'சிக்மா' படத்தை நம்பும் லைகா நிறுவனம்! | ரஜினி 173வது படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட பிரபலம்! | தனுஷ் 55வது படத்தில் தெலுங்கு நடிகர்! | கர்நாடக பாடகி எஸ்.ஜே. ஜனனிக்கு 'எம்போஹெர்' விருது | கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு | மம்முட்டி சுரேஷ்கோபி பட தயாரிப்பாளருக்கு நான்கு வருட சிறை ; 67 லட்சம் அபராதம் | 'பிரம்மயுகம்' டைரக்டரின் புதிய ஹாரர் படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்-மஞ்சு வாரியர் | என்னிடம் கேட்காமலேயே கதையை மாற்றி விட்டார் ; வரலட்சுமி மீது 'சரஸ்வதி' பட கதாசிரியர் குற்றச்சாட்டு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து |

மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டார்கள். அதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானுக்கு சில வாரங்களாக ஜாமீன் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. மேலும் ஆரியன்கானை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரு க்கு ரூ 8 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.
அதையடுத்து அந்த போதைப்பொருள் வழக்கில் இருந்து விசாரணை அதிகாரி சமீர் வான்கடே நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் வான்கடே வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் அதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஆரியன்கான் உள்ளிட்ட 6 வழக்குகள் குறித்த விசாரணை டில்லியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரிக்க உத்தரவிட கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள வான்கடே, தன்னை பணியிடமாற்றம் செய்யவில்லை என்றும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.