Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

அலெக்ஸ் பாண்டியன்

19 ஜன,2013 - 12:12 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அலெக்ஸ் பாண்டியன்

 

தினமலர் விமர்சனம்


"புரட்சிவீரன்" கார்த்தி... (ஆமாம் கார்த்தி, "பருத்திவீரன்" தானே... எப்பொழுதிலிருந்து புரட்சிவீரன் ஆனார்...?!) நடித்திருக்கும் அதுவும், அண்ணன் சூர்யாவுடன் ஜோடிபோட்ட அனுஷ்காவை ஜோடியாக்கி நடித்திருக்கும் பக்கா கமர்ஷியல் படம் தான் "அலெக்ஸ் பாண்டியன்".
கதை, இதே பொங்கலுக்கு அதோ ரிலீஸ் ஆகியிருக்கும் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்தின் அதே கதை தான். அதில் அதாங்க "க.ல.தி.ஆ.," படத்தில் சந்தானம் உள்பட மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணை டாவடித்து, அதில் ஒருத்தர் அந்த பெண்ணை கைப்பிடிப்பார். இதில், அதாங்க "அ.பா" படத்தில் சந்தானத்தின் மூன்று சகோதிரிகள் பருத்தி கார்த்தியை சாரி, புரட்சி கார்த்தியை சுற்றி சுற்றி வந்து ஈயாக மொய்த்தும், அவர்களை கார்த்தி கழற்றிவிட்டு இக்கட்டான சூழலில் சி.எம். மகளான அனுஷ்காவை காப்பாற்றி, அவருடன் லவ்டூயட் பாடுவார். லாஜிக் இல்லாமல் அனுஷ்காவையே கரம்பிடிப்பார். இதுதான் "அலெக்ஸ் பாண்டியன்" கதை!
முந்தைய படங்களை விட மெருகேறியிருக்கிறது கார்த்தியின் முகத்திலும், முழுஉடம்பிலும். பளபளப்பாய் அனுஷ்காவை காதலிக்கிறார், அத்தை மகள்களை கலாய்க்கிறார். மச்சான் சந்தானத்தை பகீர் ஊட்டுகிறார். வில்லன்களுடன் எக்குதப்பாய் மோதுகிறார். இருந்தும் என்ன பயன் தொடர் வெற்றி, அவர் மூளையை கதையில் கோட்டை விட வைத்திருக்கிறதே. கார்த்தி உஷார் பத்திரி நிஜாரு!
கார்த்தி மாதிரியே கதாநாயகி அனுஷ்கா, கண்டபடி கவர்ச்சியாகத் தெரிகிறார். இருந்தும் என்ன பயன் அவரை விட சந்தானத்தின் சகோதரிகளாக, கார்த்தியின் தூரத்து அத்தை மகள்களாக வரும் நிகிதா, சனுஷா, அக்ஷ்னா பூரி ஆகியோரின் கவர்ச்சிக்கும், கலாய்ப்புக்கும்த்தான் ரசிகர்களிடம் விசில் சப்தம் பறக்கிறது.
சந்தானம் இதே "அலெக்ஸ் பாண்டியன்" ரிலீஸ் ஆகும் நாளில் தான், தான் ராமநாரயணனுடன் இணைந்து தயாரித்து, நாயகர்களில் ஒருவராக நடிக்கவும் செய்யும் "க.ல.தி.ஆசையா" படமும் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே யோசித்திருப்பார் போலும், அதனால் "க.ல.தி.ஆ.," படத்தில் காமநெடியை காட்டாதவர், இதில்(அலெக்ஸ் பாண்டியன்) காமெடி எனும் பெயரில் கா‌மநெடியையும், டபுள், டிரிபுள் மீனிங்கையும் காட்டி, கார்த்தி படம் பார்க்க வரும் ஒன்றிரண்டு தாய்குலங்களையும் வரவிடாமல் தடுத்து விடுகிறார். பாவம்!
தேவிஸ்ரீ பிரசாத்தின் இனிய இசை, எஸ்.சரவணின் அழகிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் படத்தின் பலம்! நான்கு முனைக்காதல், முக்கோண ஆக்ஷ்ன்... என புதுமை படைத்திருக்கும் இயக்குனர் சுராஜ், திரைக்கதையையும் திருத்தி லாஜிக் மீறாமல் எழுதியிருந்தார் என்றால் "அலெக்ஸ் பாண்டியன்" - "கலெக்ஷ்ன் பாண்டியன்" -ஆக இருந்திருக்கும்! அவ்வாறு இல்லாததால் ரசிகர்கள் மனது வைத்தால் மட்டுமே "அலெக்ஸ் பாண்டியன்" - "கலெக்ஷ்ன் பாண்டியன்"!!வாசகர் கருத்து (72)

itashokkumar - Trichy,இந்தியா
25 பிப்,2013 - 08:49 Report Abuse
itashokkumar டீ கடையில் வேலை பார்க்க வெண்டியவணெல்லம் நடிக்கிறேன் என்று சொல்லி நம்ம உயிரை வாங்குராணுவ. இவனுங்கள ஏன் டாக்டராவோ இஞ்சினியராவோ இந்த சிவகுமார் ஆக்கல இளிச்சவாய் தமிழன் இருக்கநேன்றா. சிவகுமார் செய்த மிக பெரிய தவறு இது. அவருக்கு இதனால் ஒரு மரியாதையும் இல்லை.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
vetrivel - chennai,இந்தியா
15 பிப்,2013 - 19:14 Report Abuse
 vetrivel dont act karthi pls
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மணி - virudhunagar,இந்தியா
13 பிப்,2013 - 18:04 Report Abuse
 மணி Transporter 3 Remix
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராகுல் - chennai,இந்தியா
12 பிப்,2013 - 17:29 Report Abuse
 ராகுல் படம் செம மொக்கை..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
venkat - coimbatore,இந்தியா
10 பிப்,2013 - 13:43 Report Abuse
 venkat 300 begger ku potu eruntha kuda puniam achu kadachyrukum......mokka movie...story ah ella ,,,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
மேலும் 67 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

டாப் 5 படங்கள்

  • Advertisement

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2014 Dinamalar , No. 1 website in Tamil. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in