1980களில் தென்னிந்திய திரையுலகை கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின், வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் "டர்ட்டி பிக்சர்ஸ்".
படத்தில் சில்க் ஸ்மிதாவாக, பாலிவுட்டின் முன்னணி நாயகி வித்யாபாலன் நடித்துள்ளார். இவருடன் நஸ்ரூதின் ஷா, இம்ரான் ஹாஸ்மி, தஸ்கர் கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில்க்கின் சினிமா வாழ்க்கை, காதல் தோல்வி, தற்கொலை என உண்மை சம்பவங்களை அலசும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சில்க் வேடம் என்பதால், வித்யாபாலனும் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். ஏக்தா கபூர், ஷோபா கபூர் தயாரிக்க, மிலன் லூதிரா இயக்கியுள்ளார். விஷால் சேகர் இசையமைக்க, பாபி சிங் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.