Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே,
  • குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
  • கிஷோர்
  • சிப்பி
  • இயக்குனர்: கிஷோர்
01 ஜன, 1970 - 05:30 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » குமரிப்பெண்ணின் உள்ளத்திலே

சிறு வயதில் இருந்தே சினிமா மீது காதல் கொண்ட மலையாள நடிகர் கிஷோர் இயக்கி வில்லனாக நடிக்கும் படம் குமரிப்பெண்ணின் உள்ளத்திலே. அசப்பில் சத்யராஜை போலவே இருக்கிறார் கிஷோர்.

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படத்தில் கிஷோரின் நடிப்பு பாராட்டும் படி அமையும் என்கிறார்கள் யூனிட்டார். வீட்டில் இருக்கும்போது மனைவி மீராவாசுதேவன் மீது அன்பும் பாசமும் கொண்டவராகவும், வெளியே அராஜகமான இன்ஸ்பெக்டர் பரமசிவமாகவும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார் அவர். இந்த படத்தை விசாக் மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் கிரிஜா, ஆகாஷ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தில் சந்துரு என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்க, சிப்பி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவிர, மீராவாசுதேவன், நாஸர், சீதா, பொன்னம்பலம், காதல் சுகுமார், அஜெய்ரத்னம், முத்துக்காளை, செந்தில், குமரிமுத்து, பாண்டு, ஆர்த்தி, பாபிலோனா, ரிஷா, லக்ஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.


பள்ளிக்கூடத்தில் நடைபெறும் காதல்கதையாக உருவாக்கப்படும் இப்படத்தில் நாயகன், நாயகி இருவரும் ப்ளஸ்டூ படிப்பவர்கள். அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் பரமசிவம் (கிஷோர்) பள்ளி மாணவி பிரியா (சிப்பி) மீது மோகம் கொண்டு அவரை அடையத் துடிக்கிறார். அவரது ஆசை ஈடேறியதா இல்லையா என்பதே குமரிப்பெண்ணின் உள்ளத்திலே படத்தின் கதை.


ஒளிப்பதிவு : ஆர்.ஹெச்.அசோக்
இசை
: அமுதபாரதி
பாடல்கள்
: யுகபாரதி
படத்தொகுப்பு
: பி.சி.மோகன்தாஸ்
சண்டைப்பயிற்சி
: மாஃபியா சசி
நடனம்
: ட்ரீம்ஸ் காதர், அக்ஷயா ஆனந்தி, கூல் ஜெயந்த்
கலை
: ரூபேஷ்
தயாரிப்பு
: கிரிஜா, ஆகாஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
: எஸ்.கிஷோர்


- தினமலர் சினி டீம் -

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in