எஸ்.டி.என். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.புண்ணியமூர்த்தி தயாரிக்கும் புதிய படம் சிவ சிவா. புதுமுகங்கள் குமரன் கார்த்திக், நட்சத்திரா, சுஹானி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை சிவாஷ் இயக்குகிறார். தாய்க்கும், காதலிக்கும் இடையே சிக்கித் தவிக்கும் ஒருவனுடைய பிரச்னைகளை புதுமையான கோணத்தில் சொல்வதுதான் படத்தின் கதை. காமெடி, சென்டிமெண்ட் காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளித்து படத்தை உருவாக்கி வருகிறார்கள். கும்பகோணம், டார்ஜிலிங், குலுமணாலி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாறன் இசையமைக்க, சிருஷ்டி ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை டைரக்டர் சிவாஷ் எழுதியிருக்கிறார்.