சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரை நடிகர்களான அபிநவ்யா - தீபக்குமார் தங்களது காதல் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா சீரியல்களின் மூலம் சின்னத்திரைக்கு நடிக்க வந்தார். தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சித்திரம் பேசுதடி சீரியலில் நடித்து வருகிறார். அபிநவ்யா அதே சேனலில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை தொடரில் கதநாயகனாக நடித்து வரும் தீபக்குமார் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் தாங்கள் காதலித்து வருவதை அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது நிச்சயதார்த்தம் சில தினங்களுக்கு முன் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. அதன் வீடியோவை தற்போது இருவரும் தங்களது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து அபிநவ்யா - தீபக்குமாருக்கு சகநடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.