குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி |
தொலைக்காட்சி தொடர்களில் அம்மா கதாபாத்திரங்களில் அழகாக பொருந்தி நடித்து வரும் மீரா கிருஷ்ணனுக்கு உண்மையில் 34 வயது தான் ஆகிறது. இதை தெரிந்து கொண்ட ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த மீரா தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்டார். மலையாளத்தில் 'மார்கம்' என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மீரா, திருமணத்திற்கு பின் படங்களுக்கு தடைப்போட்டு விட்டார். இருந்தாலும் சீரியல்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். அம்மா கதாபாத்திரத்தில் இவர் மிக கட்சிதமாக பொருந்தி போகவே இவருக்கு பல தொலைக்காட்சி சீரியல்களிலும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
இரு தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. தொடந்து இவரது இன்ஸ்டாகிராமின் பதிவுகளை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை கண்டு மயங்கி இவருக்கு எத்தனை வயது என தேட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் மீரா கிருஷ்ணனின் வயது 34 என தெரியவே ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். 34 வயதே ஆன மீரா தனது சக வயதுடைய நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் நுழைந்தது முதல் அவருக்கு தொடர்ந்து அம்மா கதாபாத்திரம் கிடைத்து வருவதாலும், அவை அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாலும் செண்டிமெண்ட்டாக வருகிற அம்மா ரோல்களுக்கு எல்லாம் நோ சொல்லாமல் நடித்து வருகிறார்.