பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் |
தன்னிடம் ஆபாசமாக கேள்வி கேட்ட நபருக்கு கோபமாக பதிலளித்துள்ளார் சீரியல் நடிகை சுஜா வாசன்.
பொண்ணுக்கு தங்க மனசு சீரியலில் நடித்து பிரபலமான சுஜா வாசன், தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சுஜா வாசன் அடிக்கடி தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதை பார்த்த நம் நெட்டிசன்கள் கும்பலில் ஒருவர் சுஜாவிடம் அநாகரீகமான முறையில் நீங்க லெஸ்பியனா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் கடுப்பான சுஜா, "என்ன ஒரு முட்டாள் தனமான கேள்வி? ஒரு பொண்ணோட வெளிய போன உடனே இப்படி பேசுறீங்க. பையனோட வெளியே போனாலும் பையனோட சுத்துறானு சொல்லுவீங்க. நான் போடுற ஸ்டேட்டஸ் பிடிச்சா பாருங்க இல்லாட்டி பிளாக் பண்ணிருங்க. சம்மந்தமே இல்லாம பேசாதீங்க." என கோபமாக பதிலளித்துள்ளார்.