அரசாங்கம் எங்கே ? : அதிதி பாலன் கேள்வி | 2015ல் தேங்காத தண்ணீர் இந்த மழையில் தேங்கியது ஏன்? : நடிகை கீர்த்தி பாண்டியன் காட்டம் | அவமானமாக உணர்கிறேன் : ஜோதிகா பட இயக்குனர் | 'ரெட் கார்ப்பெட், ரெட் கவுன்' : நிறைவேறிய ஷாரூக்கான் ஆசை | ஜுனியர் நடிகை தற்கொலை : 'புஷ்பா நடிகர் கைது | இப்படித்தான் டின்னர் சாப்பிடணும் - ஜான்வி கபூர் | ரஜினி பிறந்தநாளில் 'ரஜினி 170, லால் சலாம்' அப்டேட்ஸ் | நாளை டிசம்பர் 8ல் 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் | கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் |
சாதாரண நிகழ்ச்சிகளை கூட பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடத்துவது விஜய் டி.வியின் பாணி. சமையல், காமெடி, நடன நிகழ்ச்சிகளை அப்படி நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறது. பெண்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி இருந்தாலும் அந்த நிகழ்ச்சியையும் தனது தனித்தன்மையோடு ஒளிபரப்ப இருக்கிறது. நிகழ்ச்சியின் டைட்டில் சிங்கிள் பொண்ணுங்க.
இந்த நிகழ்ச்சி நாளை (ஜூலை 11) ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 8 பெண்கள் போட்டியிடுவார்கள். தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள், அதை எதிர்கொண்ட விதம் பற்றி பேசுவார்கள். நடனம், பாடல், நடிப்பு மாதிரி தனித் திறமை இருந்தால் அதனையும் வெளிப்படுத்துவார்கள். 8 பேரில் யார் சிங்கிள் பெண் என்பதையும் அவர்களே தேர்வு செய்வார்கள்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக மாகாபா ஆனந்த் மற்றும் மணிமேகலை பணியாற்றுகிறார்கள். அருண், சாம் விஷால், தீனா, பாலா, சரவணன் நடுவர்களாக பணியாற்றுகிறார்கள். ராமர், தங்கதுரை, வி.ஜே.விஜய். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.