ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
விஜய் தொலைக்காட்சியின் புதிய தொடர் தமிழும் சரஸ்வதியும். சரஸ்வதியாக நக்ஷத்ரா நடிக்கிறார். தமிழாக தீபக் நடிக்கிறார். மீரா கிருஷ்ணன் - தமிழின் தாயாகவும் , ராமச்சந்திரன் - தமிழின் அப்பாவாகவும் நடிக்கிறார்கள், பிரபு - சரஸ்வதியின் அப்பாவாகவும், ரேகா - சரஸ்வதியின் அம்மாவாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர தர்ஷனா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
சரஸ்வதி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக, கலகலப்பாக, சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் ஒரு பெண். ஆனால் சரஸ்வதிக்கு படிப்புதான் ஏறாது. பிளஸ் 2 தேர்வை 8 முறை எழுதியும் பாசாகாதவர். இதனால் அப்பாவின் அர்ச்சனையில் இருந்து தப்பிக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறாள்.
தமிழ் என்ற தமிழ்செல்வன் படிக்கும் ஆர்வம் கொண்டவர், ஆனால் அதற்கான வசதி இல்லாதாவர். இதனால் படிக்காத தன் மகனுக்கு படித்த ஒரு பெண்ணை மணமுடித்து வைக்க நினைக்கிறார் அவரது தாயார். இப்படி வெவ்வேறு துருவங்களான சரஸ்வதியும், தமிழும் இணைந்தால் என்ன நடக்கும் என்பதுதான் தொடரின் கதை.
கொரோனா காலத்திலும் சுறுசுறுப்புடன் நடந்து வந்த இதன் படப்பிடிப்புகளால் 20 எபிசோட் வரை தயாராகி விட்டது என்கிறார்கள். வருகிற 12ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று சேனல் அறிவித்துள்ளது.