‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
கொரோனாவின் 2வது அலையால் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. தற்போது அத்யாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகளை அறிவித்துள்ளது. ஊரடங்கின் ஒரு பகுதியாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது, படப்பிடிப்புக்கும் அனுமதி இல்லை. ஆனால் கொரோனா காலத்தில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள் தொலைக்காட்சியில் கவனம் செலுத்துகிறார்கள். திரைப்படங்கள், சீரியல்கள் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இதனால் சின்னத்திரை சேனல்கள் தங்கள் தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டுகின்றன. பத்து நாட்கள் முதல் 15 நாட்களுக்குத்தான் எந்த சீரிலின் எபிசோட்களும் ஸ்டாக்கில் இருக்கும். அதற்குள் புதிய எபிசோட்கள் எடுக்க வேண்டும். தற்போது எல்லா சேனல்களின் தொடர்களும் கையில் இருந்த எபிசோட்களை ஒளிபரப்பி விட்டது. புதிய எபிசோட்கள் வேண்டும் என்றால் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும்.
இதன் காரணமாக ஊரடங்கு விதிமுறைகளை மீறி ரகசியமான முறையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி தமிழரசன் உள்ளிட்ட சில நடிகைகள் இதுகுறித்து வெளியிப்படையாக பேசினர். கொரோனா காலத்தில் பணியாற்ற தயங்கிய பல நடிகர் நடிகைகள் தாங்கள் நடித்துக் கொண்டிருந்த தொடரில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
பல சேனல்கள் தங்கள் அலுவலகங்களுக்குள்ளேயே செட் அமைத்தும், அலுவலக ஸ்டூடியோக்களுக்குள்ளும் ரகசியமாக படப்பிடிப்புகளை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இன்னும் சில சேனல்கள் படப்பிடிப்புக்கு அனுமதி உள்ள மாநிலங்களுக்கு சென்று படப்பிடிப்புகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வெளிப்புற காட்சிகள் இல்லாதவாறு சீரியல்களின் கதைகளை மாற்றி தொடர்ந்து படப்பிடிப்புகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவை மீறி நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நடிகர் நடிகைகளை தொடரில் இருந்து நீக்கி புதியவர்களை நடிக்க வைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. இதனை திரைப்பட சங்கங்களும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.