ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கடந்த ஆண்டு கலர்ஸ் இந்தி சேனலில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர் பாரிஸ்டர் பாபு. ஆரா பட்நாகர் படோனி, பர்விஷ் மிஸ்ரா நடித்திருந்தார்கள். சாஷி சுமித் புரொடக்ஷன் தயாரித்திருந்தது. 252 எபிசோட்களை கொண்ட தொடரை சுஷித் சுமீத் மிட்டாய், சுமீத் ஹேமசந்த் மிட்டாய் இயக்கி இருந்தார்கள்.
இது ஒரு பீரியட் கதை. சுதந்திரததிற்கு முன்பு வங்காளத்தில் நடக்கிற மாதிரியான கதை. லண்டனில் சட்டம் படித்து விட்டு திரும்புகிறார் அனிருத் ராய் சவுத்ரி. அப்போது அவரது குடும்பத்திற்குள் நடக்கும் குழந்தை திருமணம், விதவை மறுவாழ்க்கை மறுப்பு, வயதானவருக்கு இளம் பெண்ணை திருமணம் செய்தல் போன்றவற்றை அனிருத் எதிர்த்து போராடுகிற கதை.
இந்த தொடர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பொம்மி பி.ஏ.பி.எல் என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது. வருகிற மே 3 முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.