தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் |

ராஜ் தொலைக்காட்சியில் கடந்த திங்கள் கிழமை முதல் (ஏப்ரல் 19) ஒளிபரப்பாகி வரும் புதிய தொடர் நீ வருவாய் என. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. விக்கி, ஸ்ருதி, நளினி, ரோஜாஸ்ரி, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரியாவின் கதையை நாகரசன் இயக்குகிறார்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் கவுரி. தன் முழு குடும்பத்தையும் அவர் தான் சுமக்கிறார். அவருக்கு உதவுகிறார் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அண்ணபூரணி. கவுரியின் நல்ல குணத்தால் ஈர்க்கப்படும் அண்ணபூரனி. அவளை தன் மூத்த மகனுக்கு மணம் முடிக்க விரும்புகிறார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக கவுரி, அண்ணபூரணியின் இரண்டாவது மகனை மணக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் சீரியலின் கதை.