வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

பிரபல சின்னத்திரை நட்சத்திரம் தர்ஷா குப்தா. முள்ளும் மலரும் சீரியலில் விஜி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு அவளும் நானும் தொடரில் மானசா கேரக்டரில் நடித்தார். தற்போது மின்னலே, செந்தூரப்பூவே தொடர்களில் நடித்து வருகிறார். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் சினிமா ஹீரோயின் ஆகிறார் தர்ஷா குப்தா. கொரோனா காலத்திற்கு முன்பு சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு வசூலை குவித்த திரௌபதி படத்தை தயாரித்த அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ருத்ர தாண்டவம். இதையும் திரௌபதி படத்தை இயக்கிய மோகன்.ஜியே இயக்குகிறார். அதில் நடித்த ரிஷி ரிச்சர்டே இதிலும் ஹீரோவாக நடிக்கிறார்.
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். திரௌபதி படத்தின் இசையமப்பாளர் ஜூபின் இசையமைக்கிறார். படப்பிடிப்பு வட சென்னை பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
படத்தில் நடிப்பது குறித்து தர்ஷா குப்தா கூறியிருப்பதாவது: ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரௌபதி வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ்சினிமாவின் கவனிக்கப்பட்ட படைப்பை கொடுத்த, மோகன் ஜியுடன் என்பதை நினைக்கவே நான் சந்தோஷம் கொள்கிறேன் என்கிறார் தர்ஷா குப்தா.