2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

லிங்குசாமி இயக்கிய முதல் படம் ஆனந்தம். 17 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்தப்படம், ஒரு கூட்டுக் குடும்பத்தின் கதை. மம்முட்டி, முரளி, அப்பாஸ் ஆகியோர் உடன் பிறந்த சகோதரர்கள். திருப்பதி என்ற பலசரக்கு கடை நடத்துவார்கள். அந்த வீட்டுக்கு மருமகள்களாக தேவயானி, ரம்பா, வந்த பிறகு கூட்டுக் குடும்பத்தில் என்னென்ன பிரச்சினைகள் வருகிறது என்பது அந்தப் படத்தின் கதை. தற்போது இதே பாணியில் ஒளிபரப்பாக இருக்கிறது பாண்டியன் ஸ்டோர் என்ற தொடர்.
இதில் அண்ணன் தம்பிகள் 4 பேர். மூத்த அண்ணன் ஸ்டாலின். அவரது மனைவி சுஜிதா. கணவனின் தம்பிகளை பெற்ற பிள்ளைகள் போல் பாதுகாக்கிறார் அண்ணி சுஜிதா. அடுத்தடுத்த தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது. புதிய மருமகள்கள் வருகிறார்கள். அவர்களால் என்னென்ன பிரச்சினை வருகிறது. அதை ஸ்டாலினும், சுஜிதாவும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது தான் பாண்டியன் ஸ்டோரின் கதை.
இதனை சிவா சேகர் இயக்குகிறார். வருகிற அக்டோபர் 1ந் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ப்ரைம் டைமுக்குள் வரும்.