கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது அதிகரித்து வருகின்றன. அதுவும் முன்னணி நடிகை கடத்தல் சம்பவத்துக்கு பிறகு இது அதிகரித்துள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பார்வதி, நானும் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நடிகை நிஷா சாரங்கன் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிக்கும் நிஷா சாரங்கன், தற்போது ஒரு முன்னணி சேனலில் உப்பம் முலக்கும் என்ற காமெடி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
இயக்குனர் உன்னி கிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்தார். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபடுவார். இது குறித்து நான், டிவி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தும் பலன் இல்லை.
குடும்ப சூழ்நிலை கருதி அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தேன். என்னை பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். இந்நிலையில் என்னை தொடரில் இருந்து நீக்கியதாக உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த புகாரை அவர் மலையாள சினிமா பெண்கள் சங்கத்திற்கு அனுப்பி இருப்பதோடு, தனது பேஸ்புக்கிலும் பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தொடரின் இயக்குனரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.