இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்து தொடர் குறித்து கலர்ஸ் டி.வி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலத்தை மையமாக கொண்டு நடத்தப்பட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை ஒரு புதிய சாதனை படைத்தது. இந்த நிலையில் ரசிகர்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வந்தாள் ஸ்ரீதேவி என்ற புதிய தொடரை தொடங்கியுள்ளோம்.
தொட்டதெல்லாம் துலங்க வைக்கும், பட்டதெல்லாம் பூக்க வைக்கும் அதிர்ஷ்ட தேவதையான ஸ்ரீதேவியை ஊரே கொண்டாடுகிறது. ஆனால் அவரது வீடோ அவரை வேலைக்காரி போல நடத்துகிறது. தங்களின் குடும்ப சுயநலனுக்காக ஸ்ரீதேவிக்கு மாப்பிள்ளை தேடும் சதியில் ஈடுபடுகிறார்கள். அதிலிருந்து ஸ்ரீதேவி எப்படி மீண்டு வருகிறார். அவருக்கு பிடித்த ராஜகுமாரனை கரம்பிடித்தாரா? அவளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறியதா? என்கிற கதையோடு இதுவரை கையாளப்படாத களத்தில் இந்த சீரியல் பயணிக்கும், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.