மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. கடந்த 10 ஆண்டுகளாக ஒரே மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தார். அதோடு பொது வெளிகளில் நடக்கும் திரைப்படம் தொடர்பான விழாக்களில் தொகுப்பாளராகவும் இருந்தார். தற்போது அஞ்சனா, திடீரென தான் பணியாற்றிய சேனலில் இருந்து வெளியேறி விட்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
சொந்த காரணங்களுக்காக விடைபெறுகிறேன். தொகுப்பாளினியாக கடந்த 10 ஆண்டுகால பயணத்தில் மகிழ்ச்சி, அன்பு, சண்டை, ஏற்றம், இறக்கம் என எல்லாவித அனுபவங்களும் இருந்தது. என்மீது அளவு கடந்த அன்பு கொண்ட எல்லோருக்கும் கடன்பட்டிருக்கிறேன் என்று எழுதியிருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து விலகினாலும் பொது விழாக்களில் தொகுப்பாளராக தொடர்ந்து பணியாற்ற முடிவு செய்திருக்கிறார். விலகலுக்கான காரணத்தை அஞ்சனா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இன்னும் சில மாதங்களில் அதைச் சொல்கிறேன் என்று கூறியுள்ளார். அஞ்சனாவுக்கும், நடிகர் கயல் சந்திரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.