2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ்நாட்டுக்குள் இந்தி டப்பிங் சீரியல்களில் ஆதிக்கம் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஆனபோதும் தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதன்காரணமாக, இந்தி சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ள தமிழ் சீரியல் நேயர்களை இழுக்கும் முயற்சியாக தற்போது சில சீரியல்கள் பிரமாண்டமாக தயாராகத் தொடங்கியிருக்கிறது.
அதன்முதல்கட்டமாக, நான்கு மொழிகளில் குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி என்றொரு நெடுந்தொடர் தயாராகி வருகிறது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த தொடருக்காக சென்னையில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்தி சீரியலுக்கு இணையாக இந்த தொடரில் காஸ் டியூம்களும் ரிச்சாக பயன்படுத்தப்படுகிறதாம். ஏப்ரல் 24-ந்தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் திருமதி தமிழ் தொடரில் நடித்த சஞ்சய் நாயகனாக நடிக்க, அவருடன் பிரபல நடிகர் -நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.