காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு | எந்த காலத்திலும் அரசியலுக்கு 'நோ': அஜித் பேட்டி | நடிகர் சங்கத்தில்தான் திருமணம் செய்வேன் : விஷால் மீண்டும் உறுதி | ரெட்ரோ : இரண்டே நாளில் 'நன்றி முடிவுரை' எழுதிய கார்த்திக் சுப்பராஜ் | பிளாஷ்பேக்: சினிமா தயாரிக்க மோட்டார் நிறுவனத்தை விற்ற தயாரிப்பாளர் |
கோலங்கள், திருமதி செல்வம், உறவுகள், கலசம், லட்சுமி வந்தாச்சு, மைநேம் இஸ் மங்காத்தா, காயத்ரி, கேளடி கண்மணி உள்பட இதுவரை 80 சீரியல்களில் நடித்திருப்பவர் ராமச்சந்திரன். அந்த வகையில், ரம்யா கிருஷ்ணன், தேவயானி போன்ற முன்னணி நடிகைகள் நடித்த சீரியல்களில் அழுத்தமான கதாபாத்திரங்கள் நடித்து புகழ் பெற்றவர் இவர்.
கேளடி கண்மணி சீரியல் ஸ்பாட்டில் அவரை சந்தித்தபோது, இந்த சீரியலில் முதலில் நெகடீவாக இருந்த எனது ரோல் இப்போது பாசிட்டீவாக மாறியிருக்கிறது. ஆனால் அடுத்தபடியாக இந்த கேரக்டர் எப்படியெல்லாம் மாறும் என்று சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கதையில் அதிரடி திருப்பங்களை செய்து கொண்டேயிருக்கிறார் டைரக்டர். முக்கியமாக, இணையதளம் மூலம் நேயர்களின் கமெண்ட்ஸ் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்ப கதையை மாற்றிக்கொண்டேயிருக்கிறார். அதனால் நாளுக்கு நாள் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மேலும், ஒரு சீரியலில் முதலில் கெட்டவனாக காண்பித்தால் கடைசி வரை கெட்டவனாகவே காட்டுவார்கள். ஆனால், இந்த தொடரில் நான் நடித்து வந்த நெகடீவ் ரோலை பாசிட்டீவாக்கியிருக்கிறார் டைரக்டர். அது எனக்கு புதுமையாக உள்ளது. அதன்காரணமாக சீரியல் முழுக்க ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு கோணங்களில் பர்பாமென்ஸ் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. சீரியலைப் பார்க்கும் நேயர்களுக்கும் அது புதிய அனுபவமாக இருக்கும். இந்த கேரக்டர் மறுபடியும் நெகடீவாகி விடுமோ என்கிற பதட்டத்துடனேயே சீரியலைப் பார்க்கிற நிலை ஏற்படுகிறது.
அதோடு, இதுவரை நான் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்து விட்டேன்.அதனால் எதிர்காலத்தில் நான் நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இருக்கிறேன். குறிப்பாக, எனக்கு கட்டுப்பாடு எதுவும் கிடையாது. டைரக்டர்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் தண்ணீர் மாதிரி அந்தந்த பாத்திரத்திற்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேயிருப்பேன் என்று கூறும் ராமச்சந்திரன். சினிமாவிலும் நல்ல வேடங்கள் கிடைத்தால் நடிக்கும் ஐடியாவில் இருக்கிறாராம்.