'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
கன்னட திரைப்படம் மற்றும் தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ரேகா குமார், மலையாள தொடருக்கும் சென்று அங்கும் வெற்றிக்கொடி நாட்டிவிட்டு தற்போது தமிழ் சீரியல்களில் வில்லியாக முகாமிட்டிருக்கிறார். நடிப்புத் துறையில் 20 வருட அனுபவமிக்க சீனியர். பாரிஜாதம் தொடரில் வில்லியாக நடித்தவர் தற்போது தெய்வமகளில் வில்லியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் 40 தொடர்களிலும், மலையாளத்தில் 10 தொடர்களிலும் வில்லியாக நடித்த ரேகா குமார், சின்னத்திரையின் நிரந்தர வில்லி. தொடர்ந்து வில்லி வேடங்களில் தினமும் நடிப்பதால் வீட்டிற்கு சென்றாலும் வில்லி மூடுதான் இருக்கிறதாம். இதனால் வில்லி கேரக்டர்களின் எபெக்ட் வீட்டுக்குள் வராமல் இருக்க தினமும் காலை மலையில் தியானம் செய்கிறார். தற்போது அது நல்ல பலன் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார் ரேகா குமார்.