ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |
சின்னத்திரையில் பல சீரியல்களை எடுத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். இவர் தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பிற்கு நிறைய புகார்கள் வந்தன. சித்தி, அண்ணாமலை, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியிருக்கும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம், டைரக்டர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கும் தொடர்களில் இனி யாரும் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு தடை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சி.ஜே.பாஸ்கர் மீதான நடவடிக்கை குறித்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவி நடிகை குஷ்பு கூறுகையில், சி.ஜே.பாஸ்கரால் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் ஏராளமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டு வந்த சி.ஜே.பாஸ்கர் மீது நிறைய நடிகைகள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அதன்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடிகைகளை சீண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்றார்.
டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கத்தில் நடிகைகள் கவுசல்யா, சங்கவி, மல்லிகா, ப்ரீத்தி, தீபா வெங்கட், மஞ்சரி, யுவராணி, நளினி, லதா, மீரா வாசுதேவன், சீதா, வைஷ்ணவி (தற்கொலை செய்து கொண்டவர்), சந்தோஷி, தேவதர்ஷினி, திவ்யதர்ஷினி, தேவி, புவனேஸ்வரி, நீனா, சுஜிதா உள்பட ஏராளமான நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




