கார்த்தியின் சர்தார்- 2 எப்போது ரிலீஸ்? | மீண்டும் அஜித் படத்தில் சிம்ரன் | காலில் அடிபட்ட நடிகருக்காக லூசிபர் படத்தில் மாற்றம் செய்த பிரித்விராஜ் | அடுத்த சுழலுக்கு தயாரா | தனுஷ் பெயரில் மோசடி : தயாரிப்பு தரப்பு விளக்கம் | ஜோடியாக நடித்த உன்னி முகுந்தனின் 'மார்கோ' படத்தை பார்க்காதது ஏன் ? ; நிகிலா விமல் | ஐந்து வெளிநாட்டு மொழிகளில் ஓடிடியில் வெளியான புஷ்பா 2 | புலி முருகனுக்கு வாங்கிய வங்கிக்கடனை அடைக்கவில்லையா ? ; தயாரிப்பாளர் பதிலடி | 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் பார்த்திபன் | டீசலில் துள்ளல் போட வைக்கும் சிம்பு பாடிய பாடல் |
‛பாரதி கண்ணம்மா' தொடரின் மூலம் சின்னத்திரை ஹீரோவாக அறிமுகமானவர் அருண். அதேபோல் ‛ராஜா ராணி 2' தொடரில் வில்லியாக எண்ட்ரி கொடுத்து அசத்தியவர் வீஜே அர்ச்சனா. இவர்கள் இருவரும் காதலித்து வரும் தகவல் சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் டிவி விருது நிகழ்ச்சியின் மூலம் வெளியானது. எனினும், இருவரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவித்ததில்லை. அதேபோல் இன்ஸ்டாகிராமிலும் இருவரும் சேர்ந்து புகைப்படங்கள் எதையும் வெளியிட்டதில்லை.
அண்மையில் நிறைவுற்ற பிக்பாஸ் சீசன் 8ல் அருண் பிரசாத் போட்டியாளராக கலந்து கொண்டபோது தான் அர்ச்சனா, அருண் பிரசாத் தான் தனது வாழ்க்கை என அறிவித்தார். இந்நிலையில், நேற்றைய தினம் காதலர் தினத்தை முன்னிட்டு அருண் பிரசாத் அர்ச்சனாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது 5 வருட காதல் வாழ்க்கை குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அர்ச்சனாவுக்கு தனது காதலர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.