சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
ஜீ தமிழ் சேனலில் கடந்த 20ம் தேதி முதல் 'கெட்டிமேளம்' மற்றும் 'மனசெல்லாம்' என இரண்டு புதிய தொடர்கள் ஒளிப்பாகிறது. மதியம் 2.30 மணிக்கு 'மனசெல்லாம்' தொடரும், இரவு 7.30 மணிக்கு 'கெட்டிமேளம்' தொடரும் ஒளிபரப்பாகிறது. வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த தொடர்கள் ஒளிபரப்பாகும்.
மனசெல்லாம் தொடர் விருதுநகர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமத்தில் நடக்கும் கதை. குடும்பத் தலைவரான ராஜ சுந்தரம், தனது குடும்பத்தில் இரண்டு திருமணங்களை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறார். அதில் ஒரு திருமணத்தின் மணப்பெண் ஒரு காதலில் இருப்பதால் இரு திருமணங்களுமே சிக்கலாகிறது. இதனை எப்படி சமாளித்து திருமணத்தை அவர் நடத்துகிறார் என்பது கதை. தீபக், ஜெய்பாலா மற்றும் வானதி ஆகியோர் நடிக்கிறார்கள்.
கெட்டிமேளம் தொடரின் நாயகன் பொன்வண்ணன். நாயகி பிரவீணா. இவர்களுக்கு தங்களின் கனவு வீட்டை கட்டுவதும், தங்கள் மகள் திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதும்தான் இலக்கு. அதை நோக்கி எப்படி பயணிக்கிறார்கள் என்பது கதை. சாயா சிங், சவுந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் மற்றும் விராத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.