செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரையில் பிரியங்கா நல்காரி சிபு சூரியன் நடிப்பில் வெளியான 'ரோஜா' சீரியல் நீண்ட நாட்களாக டிஆர்பியில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து சாதனை படைத்தது. பல மசாலா தூவல்களுடன் சினிமாவுக்கு இணையாக ஜனரஞ்சகமாக எடுக்கப்பட்ட இந்த தொடருக்கு மக்களின் வரவேற்பும் அதிகம் கிடைத்தது.
இந்நிலையில் 'ரோஜா சீசன் 2'விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 'ரோஜா 2' தொடரில் பிரியங்கா நல்காரியே மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக நியாஸ் நடிப்பதோடு 'எதிர்நீச்சல்' புகழ் ஹரிப்ரியா கம்பம் மீனா செல்லமுத்து என சின்னத்திரை பிரபலங்களும் அத்துடன் விக்ரம் வேதா உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் ராஜ்குமாரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். ரோஜா சீசன் 1 போலவே சீசன் 2வும் டிஆர்பியில் சாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.