செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சின்னத்திரையில் ‛ரோஜா' தொடரின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சிபு சூரியன். அந்த தொடரின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இவர், பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையில் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 தொடரில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த தொடர் சிபு சூரியனுக்கு வெற்றியை தரவில்லை. பாதியிலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜீ தமிழில் வீரா என்கிற தொடரில் சிபு சூரியன் நடிக்க, அந்த தொடரிலும் அவரது கதாபாத்திரம் வெறும் கெஸ்ட் ரோலாகவே சுருக்கப்பட்டது.
இந்நிலையில், சிபு சூரியன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ரோஜா தொடருக்கு பின் நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிபு சூரியனுக்கு இந்த புதிய தொடராவது பிரேக் தருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.