தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை காட்டிலும் இந்த தொடரின் மூலம் தான் அதிக புகழும் பிரபலமும் கிடைத்தது.
இந்நிலையில் அண்மையில் 'ராதிகா அன்பானவள் கெட்டவள்' என்ற கேப்ஷனுடன் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த போது எடுத்துகொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நினைவுகளை அசைபோட்டிருக்கிறார். இதை பார்த்துவிட்டு ரேஷ்மா சீரியலை விட்டு விலகுகிறாரா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜீ தமிழ் கார்த்திகை தீபம் தொடரில் ரேஷ்மாவுக்கு மெயின் லீட் ரோல் கிடைத்திருப்பதால் பாக்கியலெட்சுமி சீரியலிலிருந்து விலகிவிட்டார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.