முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | மனைவி உயிரை காப்பாற்ற கோரிக்கை வைத்த நடிகர் முத்துக்காளை : முதல்வர் விஜய் நடவடிக்கை |

ரஜினி- பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை கவுதமி. அதன் பிறகு தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர், அவருடன் இணைந்து பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த கவுதமி தற்போது சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற தொடரில் கவுதமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.