சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார் அன்ஷிதா. சில மாதங்களுக்கு முன் இந்த தொடர் முடிவுக்கு வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5-ல் கோமாளியாக களமிறங்கினார். அன்ஷிதாவிற்கு தமிழகத்தில் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர். அவரது சோஷியல் மீடியா பதிவுகளுக்கும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், அன்ஷிதா ஒருவருடன் கையை கோர்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'புயலால் கூட நமது உறவை அசைக்க முடியாது' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து யார் அந்த காதலர்? என்று கேட்டுக்கொண்டிருக்கின்றனர். சிலர் அது செல்லம்மா தொடரில் ஹீரோவாக நடித்த அன்வர் தான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.