லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கன்னட திரைப்பட நடிகையான சுப ரக்ஷா ‛கார்த்திகை தீபம்' தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் வில்லியாக மிரட்டி வந்த இவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்து வந்தது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற ‛ஆசிய ஐகான் விருது' நிகழ்விலும் சுப ரக்ஷாவுக்கு சிறந்த மாடல் மற்றும் நடிகைக்கான விருது கிடைத்தது.
இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரிலிருந்து சுப ரக்ஷா திடீரென விலகினார். அவருக்கு பதிலாக தற்போது சாந்தினி பிரகாஷ் நடித்து வருகிறார். சுப ரக்ஷா எதற்காக சீரியலை விட்டு விலகினார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்ப, தற்போது அதற்கு பதிலளித்துள்ள சுப ரக்ஷா, 'ரசிகர்களின் அன்பை பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது கன்னடத்தில் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதால் கார்த்திகை தீபம் தொடரிலிருந்து விலகி இருக்கிறேன். விரைவிலேயே புதிய சீரியலில் உங்களை சந்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.