ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. பண்டிகை தினங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளையும் புத்தம் புதிய திரைப்படங்களையும் ஒளிபரப்பி மக்களை மகிழ்விப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சுகி சிவம் தலைமையில் சுதந்திரத்துக்கு பெரிய தடையாக இருப்பது முதியோர் குணமா? இளையோர் மனமா? என்ற தலைப்பில் கலகலப்பான சுதந்திர தின சிறப்பு பட்டிமன்றம் ஒளிபரப்பாக உள்ளது.
அதனை தொடர்ந்து மதியம் 11 மணி முதல் 2 மணி வரை "தமிழா தமிழா விருதுகள் 2024" என்ற விருது விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த விருது விழாவில் விடுதலை தொல் திருமாவளவன், வேல்முருகன், பிரேமலதா விஜயகாந்த், நக்கீரன் கோபால், இயக்குனர் கோபி நாயர், நடிகை ரோஹினி, இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். சமூக நலனிற்காக பணியாற்றியவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் தமிழா தமிழா விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.
அடுத்ததாக மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, டெல்லி கணேஷ் என பலரது நடிப்பில் வெளியான ரத்னம் ஒளிப்பரப்பாக உள்ளது. ஒரு நில பிரச்னையை மையமாக வைத்து தமிழக, ஆந்திரா பார்டரில் நடக்கும் பரபரப்பான கதைக்களத்துடன் இந்த ரத்னம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
இப்படி சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் திரைப்படமான ரத்னம் படம் வரை அனைத்தையும் மிஸ் பண்ணாமல் பார்த்து ஜீ தமிழுடன் உங்கள் சுதந்திர தின நாளை கொண்டாட தயாராகுங்கள்.