ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
பல வருடங்களுக்கு முன்பு வெற்றி பெற்ற படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி ரீ ரிலீஸ் செய்யும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் மோகன்லால் நடித்து கடந்த 2000-ல் வெளியாகி, ஆனால் வெளியானபோது வரவேற்பை பெறாத தேவதூதன் என்கிற படமும் கடந்த வாரம் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆனது.
ஆச்சர்யமாக இந்தப்படம் வெளியான பத்து நாட்களில் 3.2 கோடி வசூலித்துள்ளது. கேரளாவை பொறுத்தவரை ரீ ரிலீஸில் இந்த தொகை ரொம்பவே அதிகம். அதிலும் கடந்த சில நாட்களாக வயநாடு நிலச்சரிவு பாதிப்பு காரணமாக வசூலில் கொஞ்சம் தேக்கம் ஏற்ப்பட்டது. இல்லையென்றால் இன்னும் அதிகம் வசூலித்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
குறிப்பாக கடந்த வருடம் ரீ ரிலீஸ் செய்யப்பட மோகன்லாலின் ஹிட் படமான 'ஸ்படிகம்' படத்தின் வசூல் சாதனையை இந்தப்படம் முறியடித்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் சிபிமலயில் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஜெயப்பிரதா நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து கிட்டத்தட்ட 30 நிமிட காட்சிகளை வெட்டிவிட்டு, ரீ ரிலீஸ் செய்யப்பட்டதால் மொத்தப்படமும் 'கிரிப்'பாக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.