ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி | ‛தி கோட்' - ஜீவனுக்கு முதலில் உருவாக்கிய விஜய்யின் தோற்றம் வைரல் | ரஜினி உடன் மட்டும் வந்த கிசு கிசு : நடிகை லதாவே அளித்த பதில் | வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா ரக்ஷன் ? | அடுத்தடுத்த துயரங்களில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு மம்முட்டி ஆறுதல் | டொவினோ தாமஸ் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது மலையாள நடிகை தாக்கு | இயக்குனர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காசி இயக்குனர் | மின்னல் முரளி கதாபாத்திரங்களை பயன்படுத்த நீதிமன்றம் தடை |
ஜீ தமில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய தொடர்களில் ஒன்று மீனாட்சி பொண்ணுங்க. இந்த தொடரின் ஆரம்பத்தில் மூத்த நடிகை அர்ச்சனா டைட்டில் ரோலில் நடித்து வந்தார். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இடையிலேயே விலகிவிட அதனை தொடர்ந்து நாயகியாக நடித்து வந்த மோக்ஷிதாவும் விலகினார். இந்த தொடரானது தற்போது ஒருவழியாக கிளைமாக்ஸை எட்டியுள்ளது. இதனை அந்த தொடரின் நாயகன் ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். வெற்றியாக அவர் நடித்துள்ள மானிட்டர் காட்சியை பதிவிட்டு 'ஐ மிஸ் ஹிம் சோ பேட்லி' என்று பதிவிட்டுள்ளார். இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியானது வருகிற ஞாயிறு மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.