பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான கே ஆர் விஜயா, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‛சிறகடிக்க ஆசை' சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதனால் அவர் அந்த சீரியலில் நடிக்கிறாரா என்றும் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மூத்த நடிகை கே ஆர் விஜயா இன்று நான் சிறுதும் எதிர்பாராத நேரத்தில் வருகை தந்தார். அவர்களை நேரில் சந்தித்த நிமிடம் மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த சீரியலின் கதாபாத்திரமான முத்து, சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் அவர் கே ஆர் விஜயாவை அழைத்து வருவது தான் சர்ப்ரைஸாக இருக்குமென ரசிகர்கள் கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.