'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் அதிக புகழை பெற்றவர் வீஜே தீபிகா. மீடியாவில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையில் வீஜேவாக நுழைந்து அதன்பின் சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியல்களில் தோன்றிய அவர், தற்போது தமிழ்நாட்டு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார்.
இந்நிலையில், அவர் நடிக்க வந்த புதிதில் பட்ட அவமானங்களையும் கஷ்டங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், 'நான் திருநெல்வேலியில் இருந்து வந்ததால் அந்த ஊர் பாஷையில் தான் பேச வரும். இதனாலேயே என்னை ரிஜெக்ட் செய்தார்கள். பல போராட்டங்களுக்கு பிறகு சந்திரமதி சீரியலில் சிறு ரோல் கிடைத்தது. அதுவும் சில நாட்களுக்கு மட்டும் தான். கொரோனா காலக்கட்டத்தில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது திடீரென லாக்டவுடன் போட்டார்கள். ஊருக்கு போய்விட்டால் நம்முடைய ரோலை மாற்றிவிடுவார்களோ என்று பயந்து சென்னையிலேயே தங்கிவிட்டேன். அதேசமயம் வருமானம் இல்லாமல் கையில் பணம் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். சாப்பிட கூட வழியில்லாமல் நடுத்தெருவில் நின்று அழுதிருக்கிறேன். அதெல்லாம் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்கள்' என உருக்கமாக கூறியுள்ளார்.




