அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மேடைபேச்சு, பட்டிமன்றம் மூலம் புகழ்பெற்றவர் சந்தியா. 'சவுண்டு சந்தியா' என்ற அவருக்கு பட்டப்பெயர்கூட உண்டு. தனது பேச்சுதிறனால் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன்பிறகு 'கண்மணி' சீரியலில் அறிமுகமான சந்தியா, சுந்தரி நீயும் சுந்தரன் நானும், நம்ம வீட்டுப் பொண்ணு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'சக்திவேல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவர் 'மெட்டி ஒலி' சாந்தியின் மருமகளாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சாந்தியின் நிஜ மருமகளாகவும் சந்தியா ஆகிறார். சாந்தியின் மகன் முரளிக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. இது பெற்றவர்கள் முடிவு செய்த திருமணமாம். திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்துள்ளது. அந்த படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மாமியாருக்கும், மருமகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.