இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் |
தமிழ் சின்னத்திரையில் 90கள் காலக்கட்டத்தில் சூப்பர் ஹிட் அடித்த குடும்பத் தொடர் என்றால் மெட்டி ஒலி தான். அதன்பின் தமிழ் சின்னத்திரையில் இன்று வரை எதார்த்த மனிதர்களின் கதையை சொல்லும் ஒரு தொடர் வந்தது இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த தொடரின் 2 வது பாகம் தற்போது உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தொடரை திருமுருகன் இயக்கப் போவதில்லை எனவும் சினி டைம்ஸ் தயாரிக்கும் இந்த இரண்டாவது பாகத்தை இயக்குநர் விக்ரமாதித்யன் என்பவர் தான் இயக்கவிருப்பதாகவும் தெரிய வருகிறது. மேலும், முதல் பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களிடமும் இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.