ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தனியார் தொலைக்காட்சியில் விரைவில் மல்லி என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் மூத்த நடிகர்களான பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன்பாப் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் மக்கள் மனம் கவர்ந்த 'அருந்ததி' தொடரின் கதாநாயகியான நிகிதா ராஜேஷ், ரோஜா தொடரில் வில்லியாக கலக்கிய 'வீஜே அக்ஷயா', சுந்தரி மற்றும் திருமகள் தொடரில் வில்லியாக நடித்திருந்த 'கிரேசி தங்கவேல்', பாண்டவர் இல்லத்தில் நடித்திருந்த 'கிருத்திகா அண்ணாமலை' ஆகியோர் கம்பேக் கொடுக்க உள்ளனர். மேலும் இந்த தொடரில் விமல் வெங்கடேசேன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே கமிட்டாகியிருக்கும் இந்த தொடர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இந்த தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது.