ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சின்னத்திரை சீரியல் வரலாற்றில் முடிசூடா ராணியாக கொடிக்கட்டி பறந்தவர் என்றால் அது நடிகை ராதிகா தான். அவரது ராடன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் பல சீரியல்களை தயாரித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது கிழக்கு வாசல், தாயம்மா என்கிற இரண்டு தொடர்களை தயாரித்து வருகிறார். இதில் கிழக்கு வாசல் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தாயம்மா தொடர் பொதிகை சேனலில் ஒளிபரப்பாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்களாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாயம்மா தொடரை ஒளிபரப்பும் உரிமையை கலைஞர் டிவி வாங்கியுள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தாயம்மா தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் நேரம் மிகவிரைவில் அறிவிக்கப்பட உள்ளது.




