பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் உலக அளவில் பலநாட்டிலும் இருக்கும் தமிழர்களால் பார்க்கப்படுகிறது. எனவே, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் உலக நாடுகளில் இருக்கும் தமிழர்களையும் கலந்துகொள்ள செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து அசானி என்ற பெண் கலந்து கொள்கிறார். அசானியின் குடும்பம் இலங்கையில் கூலி தொழில் செய்து வருகின்றனர். சிறுமி அசானி ரேடியோவில் போடும் பாடலை கேட்டு கேள்வி ஞானத்திலேயே அருமையாக பாடி வருகிறார்.
இந்நிலையில், ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆசைப்பட்ட அவருக்கு மெகா ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. காரணம் தமிழ்நாட்டிற்கு அவர் வருவதென்றால் 1.5லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால், அசானியின் குடும்பத்தினரிடம் அவ்வளவு தொகை கிடையாது. இதனையறிந்த ஊர்மக்கள் அனைவரும் சிறுமி அசானிக்காக தங்கள் சேமிப்பு பணத்தை கொடுத்து அசானியையும் அவரது தந்தையும் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறுமி அசானியின் பாடல் பாடும் திறமையை ஏற்கனவே அறிந்திருந்த நடுவர்களும், மெகா ஆடிஷனில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவருக்காக சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளனர். அந்த மேடையில் 'ராசாவே உன்னை நம்பி' பாடலை அழகாக பாடிய அசானிக்கு தற்போது உலகெங்கிலும் பலரும் ரசிகர்களாகிவிட்டனர். சிறுமி அசானிக்காக பெரும் உதவியை செய்த ஊர்க்காரர்களின் நல்ல உள்ளங்களுக்காவது அசானி தொடர்ந்து ஜெயிக்க வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.