இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

திரைத்துறைக்கு அறிமுகமான சில நாட்களிலேயே வெள்ளித்திரை, சின்னத்திரையின் அனைத்து பரிமாணங்களிலும் நடித்துவிட்டார் நடிகை காயத்ரி கிருஷ்ணன். அதிலும், எதிர்நீச்சல் தொடரில் இவர் நடித்து வரும் ஜான்சி ராணி கதாபாத்திரம் இவருக்கு பெரிய அளவில் பெயரையும் புகழையும் பெற்று தந்துள்ளது. படிப்பில் பி.எச்.டி முடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணன் தியேட்டர் ஆர்டிஸ்ட், மாடலிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஒரு மாடலிங் போட்டியில் வேலு நாச்சியர் கெட்டப்பில் மிரட்டியிருக்கிறார். மேலும், அந்த போட்டியிலும் அவரே வெற்றி பெற்று விருதையும் வென்றுள்ளார். காயத்ரி கிருஷ்ணன், வேலுநாச்சியார் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரது திறமையை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர். .