கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது |
சின்னத்திரை நடிகை நிலானி தமிழில் சில சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலீஸ் சீருடை அணிந்து வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமீபகாலங்களில் தொலைக்காட்சி தொடர்களில் நிலானிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதேசமயம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பிசியாக உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நிலானியின் ரசிகர் ஒருவர் 'எப்போதான் புதுச்சேரிக்கு வருவீங்க. நான் எப்போ நிலானி மக்கள் சேவை இயக்கம்' என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரியாக்ட் செய்து ரீல்ஸ் வெளியிட்டுள்ள நிலானி, 'என்னது மக்கள் இயக்கமா? இதுவரை இதப்பத்தி யோசிக்காம விட்டுட்டேன். இனிமேல் யோசிக்கிறேன்' என்று பதிலளித்துள்ளார்.
இதைபார்த்த நெட்டிசன்கள் பப்ளிசிட்டிக்காக நிலானியே இப்படி கமெண்ட் செய்திருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.