ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் ஆக்டிவாக நடித்து வருகிறார் சுவாதி ராயல். பெங்களூரை சேர்ந்த இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை ஆரம்பித்து இப்போது சீரியல் நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' என்ற தொடரில் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள மோதலும் காதலும் என்கிற புதிய தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் சுவாதி ராயல் கமிட்டாகியுள்ளார். இதில் ஹீரோ சமீருக்கு ஜோடியாக அஸ்வதி என்ற ஹீரோயின் நடித்து வருகிறார். எனவே, இந்த தொடரிலும் சுவாதி ராயல் வில்லியாக தான் மிரட்டப்போகிறார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.