''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான நடிகர் அபிநய், சென்னை 28 பாகம் 2, ரமானுஜன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமானார். இவரது மனைவி அபர்ணா, மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி நெருங்கிய தோழியிடமே பண மோசடி செய்துள்ள விவகாரம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அபர்ணாவின் தோழியான மஞ்சு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. இதைகேட்ட அபர்ணா, பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு நண்பர் இருப்பதாகவும் அவரிடம் 20 லட்சம் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அபர்ணாவின் வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை மஞ்சு செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, சீட் கிடைத்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து மஞ்சுக்கு அனுப்பியுள்ளார். சான்றிதழுடன் கல்லூரி அட்மிசனுக்கு சென்ற மஞ்சுவுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் போலி சன்றிதழ் என்று கூறி அட்மிசன் போட மறுத்துவிட்டனர். இதனால் மஞ்சு பணத்தை திருப்பி கேட்க, உஷாரான அபர்ணா தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது மஞ்சு புகார் அளித்துள்ளார். அபர்ணா மற்றும் அவருக்கு உதவிய அஜய் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.