''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சந்தோஷ் எழுதி இயக்கி, தாணு தயாரிப்பில் வெளிவந்த படம் கணிதன். இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்திருந்தார். அதர்வா, கேத்ரின் தெரசா, கே.பாக்யராஜ், ஆடுகளம் நரேன், மனோபாலா மற்றும் கருணாகரன், தருண் அரோரா உள்பட பலர் நடித்திருந்தனர்.
தொலைக்காட்சியில் பெரிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் அதர்வா, பிபிசியில் வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததற்காக கைது செய்யப்படுகிறார். தனது கல்வி ஆவணங்கள் பொய்யானவை என்பதை அறிந்த அதர்வா அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை.
2016ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 7 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக நாளை (29ம் தேதி) கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து இயக்குனர் சந்தோஷ் கூறும்போது “படம் வெளியானபோது பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைக்கதையில் இதுபோன்ற இருண்ட உண்மைகளை மக்களுக்கு மத்தியில் வெளிக்கொணர்வது சவாலானது ஆகும். சில சுவாரஸ்யமான துப்புகளுக்கு வழிவகுக்கும் எலியும் பூனையுமாக துரத்தி கொண்டு செல்வது பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்றார்.