சாதுவன்: ஒரே இரவில் நடக்கும் கதை | அமிதாப் பச்சன் விளம்பரத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு | விவேக் ஓபராயிடம் பண மோசடி செய்த தயாரிப்பாளர் கைது | அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு | பாலியல் தொல்லை - ஈஷா குப்தா புகார் | கேரளா, தமிழ்நாடு, அஜர்பைஜான் - 3 இடங்களில் 3 முக்கிய படப்பிடிப்புகள் | ‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி | 'தங்கலான்', அதிகம் எதிர்பார்க்கும் மாளவிகா மோகனன் | 'விக்ரம், ஜெயிலர், லியோ' வரிசையில் 'ரஜினி 170' | 'கோஸ்ட், டைகர்' போட்டியை சமாளிக்குமா 'லியோ' ? |
தொலைக்காட்சிகளில் பிரபலமான சாய் காயத்ரி ஆங்கரிங், ஆக்டிங் என சின்னத்திரையில் அனைத்து சேனல்களிலுமே ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார். தவிர 'கனா காணும் காலங்கள்', 'கல்லூரியின் கதை', 'ஈரமான ரோஜாவே', 'சிவா மனசுல சக்தி' ஆகிய தொடர்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் நடித்து வரும் சாய் காயத்ரி, தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தின் காட்சிகளுக்காக டப்பிங் பேசும் சாய் காயத்ரி அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சாய் காயத்ரிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சாய் காயத்ரி என்ன படத்தில் நடிக்கிறார்? யார் ஹீரோ? யார் இயக்குநர்? டைட்டில் என்ன? என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.