டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

அபியும் நானும் தொடரில் காமெடி கெட்டப்பில் நடித்து வரும் குருவி தமிழ்ச்செல்வன், அதே தொடரில் நடித்து வரும் நடிகை ஹென்ஷாவின் பிறந்தநாள் அபியும் நானும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடினார். இதில் படக்குழுவினரும், ரம்யா கவுடாவும் இருந்தனர். அப்போது பர்த்டே பேபியான ஹென்ஷா கேக் வெட்டுவதற்காக மெழுகுவர்த்தி ஏற்றும் குருவி தமிழ்ச்செல்வன் தீக்குச்சியை அணைக்கிறேன் என்கிற பெயரில் மெழுகுவர்த்தியையும் சேர்த்து ஊதி அனைத்துவிடுகிறார். இதை பார்க்கும் பர்த்டே பேபி ஹென்ஷா, பர்த் டே உனக்கா எனக்கா என கிண்டலடித்து சிரிக்கிறார். அவருடன் ரம்யா கவுடாவும் படக்குழுவினரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். குக் வித் கோமாளி புகழுக்கு டூப் போட்டது போல் இருக்கும் குருவி, அவரைப் போலவே பல கோமாளித்தனங்களை செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.