எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
சினிமா நடிகரான சந்தோஷ் பிரதாப் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் சார்பட்டா படத்தில் அவர் நடித்த ராமன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இருப்பினும் திரையில் தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் விஜய் டிவியின் நம்பர் ஒன் காமெடி ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், முழுநேர டிவி ஆர்ட்டிஸ்டாக மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் கேட்கும் வகையில் தற்போது சீரியலிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
விஜய் டிவியின் ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகர்களை அதிக அளவில் கொள்ளைக்கொண்ட தொடர் கனா காணும் காலங்கள். தொடர்ந்து பல சீசன்களாக வெளிவந்த இந்த தொடர் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி வருகிறது. இதில் தான் சந்தோஷ் பிரதாப் அசோக் என்ற கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இதைபார்க்கும் சந்தோஷ் பிரதாப் ரசிகர்கள் சினிமா ஹீரோ இறுதியில் சீரியலுக்கு வந்துவிட்டாரே என வருத்தத்தில் பேசி வருகின்றனர்.