கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' |
ஜீ தமிழ் சீரியல்களால் 'யாரடி நீ மோகினி', 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை அக்ஷயா கிம்மி. பருமனான உடல் தோற்றம் கொண்ட அக்ஷயாவை ஆரம்பத்தில் சிலர் பாடி ஷேமிங் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். குண்டாக இருந்தாலும் இவர் நடன ஒரு கலைஞர் ஆவார். எனவே, சோஷியல் மீடியாவில் இவர் அவ்வப்போது குத்தாட்டங்களுக்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு போட்டோஷூட் புகைப்படங்களை அக்ஷயா கிம்மி வெளியிட்டுள்ளார். அதில், அக்ஷயாவும் அவரது அம்மாவும் ஒரே காஸ்டியூம் அணிந்துள்ளனர். அதன் கேப்ஷனில் 'இவர் தான் என்னுடைய தேவதை, என்னுடைய அம்மா. எனக்கே நம்ப கஷ்டமாக தான் இருக்கிறது. ஆனாலும், இவர் என் அக்கா இல்லை என் அம்மா' என பதிவிட்டுள்ளார்.